Retirement
Function For
Er.P.Marimuthurajan,
Chief Engineer

பணி நிறைவு பாராட்டு விழா மனம் நிறைந்த சீராட்டு உலா

மல்லிகைப் பூவின் மணம்
மகிழ்வு தரும்
எங்கள் மாமாவின் குணம் நெகிழ்வு தரும்

சொந்த காசில் தனக்கே சூனியம்
வந்த காசையும்
பிறருக்கு தானமாய்
தந்து காத்திடும்
எம் தந்தைக்கு நிகர் மாமனாம்

உழைத்தால் உயர்ந்திடலாம் உண்மை
முயன்றால் வென்றிடலாம் திண்மை
முயற்சிப்பது இவரது தாரக மந்திரம்

காரி நிறத்து இரத்தின ராமன்
மாரி பொழில் முத்து ராஜன்
பாரிவள்ளல் கெத்து மாமன்

வெயிலுகந்த அம்மன் அருளாசி
பழனிச்சாமி பிள்ளையின் உபதேசம்
திக்கு தெரியாத சூழலில்
தேடி வந்த தெய்வமாய்
நல்லமுத்து சுவாமியின் உபகாரம்

இவருடன் பிறந்த
ஆறுமுகத்து அக்காவும்
மாரி முத்துவேல் அண்ணனும்
இலட்சுமி புஷ்பம் ஈஸ்வரி என்ற உடன்பிறப்புகளும்
இரத்தத்தின் ரத்தமான உறவுகளும்
நாடி வந்த நட்பும்
தேடி வந்து உதவிட
அச்சமின்றி உச்சம் நோக்கினார்
தேற்றும் நிலை மாறி
போற்றும் படி மாறினார் மாரி

அதிகாலை துயில்
அன்றாடம் வயல்தனில் வேலை
என்றாலும் விடாத முயற்சி
ஏழ்மையிலும் தொடர்ந்திட்ட கல்வி
வென்றாக வேண்டிய கட்டாயம்
வேங்கையென புறப்பட்ட முத்துராஜன்

தாய் தெய்வமாகிட
தந்தை வழக்கினில் மூழ்கிட
பெருந்துவாரம் கொண்ட சிறு கப்பலாய்
நிறை பாரமுடன் வாழ்க்கை கடுஞ்சிக்கலாய்

மனபாரம் தாங்கி
அகச் சோர்வு நீங்கி
பகலிரவு பாராது
பயின்றார் அன்று
பயின்றதன் பயன்தனை
பார்க்கின்றார் இன்று

பார்த்தால் பசியின் கொடுமை தெரியாது
வார்த்தையால் அதன் தாக்கமும் அடங்கிடாது
வறுமையை உணர்ந்திவர்
வாழ்க்கையை வெல்ல துணிகிறார்…..
வளமையாய் வாழ்ந்திட
கல்வியே வழியென காண்கிறார்

நட்டு வைத்த நாற்றிணை வளர்த்தார்
களையெடுத்து கதிரினை காத்தார்
நெடுவயல் முழுவதும் நீர் பாய்ச்சி நின்றார்
முற்றிய கதிரினை முற்றும் கொண்டு சேர்த்தார்
முனைப்புடன் செயல்பட்டு முன்னேற துடித்தார்

பட்டியில் கட்டிய மாட்டையும் மேய்த்தார்
ஏரினில் பூட்டிய வயலையும் உழுதார்
வண்டியில் பூட்டியும் நெற்களம் சேர்த்தார்
போரடித்து நெல்மணிகள் பொதியினில் அளந்தார்
போராடி வாழ்வினை வென்றிட முனைந்தார்

செவிடு ஆழாக்கு உலக்கு போதாது
உரி படி மரக்கால் பதக்கு பத்தாது
தூணி பறை கரிசை கலம் காணாது
பொதியினில் மூட்டி இரவினில் காத்து
அரவையில் அவித்து நெல்மணிகளை சேர்த்தார்….

தோப்பினில் காய்த்த தென்னையை காத்தார்
மராமத்து பணிகளையும் மகிழ்வுடன் ஏற்றார்
தென்னை ஓலைகளில் கிடுகுகள் வேய்ந்தார்
பண்ணை ஆளென பாடுபட்டு வளர்ந்தார்
தன்னை முன்னிறுத்தி துஞ்சாது உழைத்தார்

ஓரெட்டு கிலோமீட்டர் தூரத்தில் பள்ளிக்கூடம்
ஈரெட்டு வருடங்கள் கடந்தார் கஷ்டமுடன்
மூவட்டு மணி நேரம் பயின்றார் இஷ்டமுடன்
நான்காறு ஆண்டுகளில்
முடித்தார் முதுநிலை பட்டமுடன்
ஐந்தாறு ஆண்டுகளில் வளமையை காண்கிறார்

அயர்விலும் கூட
துயில்தனை மறந்தார்
பகல் இரவு பாராது படிப்பினை நினைந்தார்
முதல் நிலை மாணவனாய் முன்னேறி வென்றார்
முதல் தர கல்லூரியில் முனைப்புடன் நுழைந்தார்
கனவுகள் நனவானது கற்பனை நிஜமானது

திண்டுக்கல் பச்சேரி ஸ்ரீ நல்லதங்காள்
தனியார் கல்லூரியில் பணியினை தொடங்கி

அனல் மின் நிலையம் கொண்ட தூத்துக்குடியில்
அரசு பணியாளராய்……

நெடுஞ்சாலை துறையில் உதவி பொறியாளராய்
தொடர்ந்தார்

தூத்துக்குடி
அறந்தாங்கி
துவரங்குறிச்சி
காரைக்குடி

விராலிமலை AD
ஆண்டிபட்டி
ஒட்டன்சத்திரம்

திருநெல்வேலி DE
இராமநாதபுரம்
சென்னை SE

மதுரை CE

நீண்ட நெடிய நெடுஞ்சாலை பயணம்

முப்பத்து மூன்று
வருடங்கள் நிறைவுறும் வேளையில் பூஞ்சோலையாய்
நெஞ்சம் நிமிர்ந்திட
சிறப்பு தலைமை பொறியாளராய்
பணி நிறைவு செய்கிறார்

நெஞ்சுக்குள் வஞ்சமின்றி
யாருக்கும் தீமை இன்றி
பணி செய்த திருப்தியில்
மன நிறைவு கொள்கிறார்

பணி முடிக்கும் சிரத்தை நோக்கினால்
பணிசுமையால் சொன்ன கடுஞ்சொல்லும்
மனசோர்வால் விளைந்த பிறவாதங்களும்
இருந்திருக்க வேண்டும்
சில நேரங்களில்
அதன் பொருட்டு
சக அலுவலர் மனம்
வருந்தியிருக்கக்கூடும்
பல சூழல்களில்

பிழையாக எண்ணிடாது
கனவாக மறந்திடுக
கனிவாக உன் நட்பை தொடர்ந்திடுக

மலர்களின் சிறப்பு மல்லிகை
மல்லிகையின் சிறப்பு மதுரை
மதுரையின் சிறப்பு மீனாட்சி
மீனாட்சியின் சிறப்பு அருளாசி

மீனாட்சியின்
அருளாசியால் நிரம்பிடட்டும்
சொக்கநாதரின்
பெரு வரத்தால் சூழ்ந்திடத்தும்

வழிவகை காணும் மனம்….
பழி பகை அறியா வாழ்வு
இழிநிலை அடையா வரம்
ஒளி நிலை அடைகின்ற உணர்வு

தலைமை பண்பு
தர்மம் செய்கின்ற செயல்
திறமைகள் வளர்ந்திடல்
தினமும் ஜெயம்

திண்ணிய எண்ணல்
எண்ணிய முடித்தல்
நல்லதை நினைத்தல்
நினைப்பவை நடத்தல்

அழியாத கல்வி
நிலையில்லா செல்வம் பிணியில்லா வாழ்வு
பிரிவில்லா நட்பு

நோயற்ற வாழ்வு
குறைவற்ற செல்வம் மட்டற்ற மகிழ்ச்சி
ஒப்பற்ற நிலை

கரம் ஏந்தா நிலை
சிரம் தாழா பணி
புறம் கூற மனம்
தரம் தாழா வாழ்வு

கடன் வாங்க நிலை
உடன் இருப்போர் நலம் பிறர் நெஞ்சை கவர்ந்ததிடல்
இவர் இறையென போற்றிடல்

நலம் நல்வளம்
நல்ல குணம்
நாடாளும் திறம்
பெரு வெற்றி
மிகை சக்தி
கூறிய புத்தி சீரிய பக்தி
இறைசித்தி
பிறவாநிலையுடன் முக்தி.

பேராற்றல் தரவல்ல பிரபஞ்சம் பேரானந்தத்தை எல்லோருக்கும்
வழங்கிடட்டும் …….

ஆடலரசு.Er.N. நடராஜன், மணப்பாறை – 94431 55374

CONTACT US

Phone : +91 75989 25450

velx.info@gmail.com